இறக்­கு­வானையில் மண்சரிவு அபாயத்தால் வெளியேறிய 25 குடும்பங்களுக்கு இன்னும் வீடு இல்லை

இறக்­கு­வானை மாதம்பை இல. 2 தோட்­டத்தில் மண்­ச­ரிவு அபா­யத்தால் வெளி­யே­றிய மக்­க­ளுக்கு இது­வரை வீடு அமைத்துக் கொடுக்கும் நட­வ­டிக்க...இறக்­கு­வானை மாதம்பை இல. 2 தோட்­டத்தில் மண்­ச­ரிவு அபா­யத்தால் வெளி­யே­றிய மக்­க­ளுக்கு இது­வரை வீடு அமைத்துக் கொடுக்கும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்­லை­யென மக்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.

மாதம்பை வைத்­தி­ய­சா­லைக்கு மேற்­பக்­கத்தில் சுமார் 25 குடும்­பங்கள் வாழ்ந்து வந்­தன. கடந்த 2015 நவம்பர் மாதம் பெய்த கடும் மழையால் வீடு­க­ளிலும் நிலங்­க­ளிலும் வெடிப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன. 

இதனைத் தொடர்ந்து புவிச் சரி­த­வியல் ஆராய்ச்சி நிலைய அதி­கா­ரி­களால் இது அவ­தா­னிக்­கப்­பட்டு இவர்­களை வெளி­யே­று­மாறு அறி­வித்­துள்­ளனர். கொடக்­க­வெல பிர­தேச செய­லாளர் மூலம் இவர்கள் தற்­கா­லி­க­மாக தங்­கு­வ­தற்கு மாதம்பை இல. 2 தமிழ் வித்­தி­யா­ல­யத்தில் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு உலர் உணவுப் பொருட்­களும் வழங்­கப்­பட்­டன.

இதனைத் தொடர்ந்து இவர்­களை உற­வி­னர்கள் வீடு­க­ளுக்கும் தோட்ட மக்கள் வசிக்கும் காலி­யாக இருக்கும் அறை­க­ளுக்கும் செல்­லு­மாறு பணிக்­கப்­பட்­டது. 

இதனைத் தொடர்ந்து பாட­சாலை மாண­வர்­களின் கல்­விக்கு இடை­யூறு விளை­விக்­காது மாத வாட­கைக்கும் உற­வி­னர்­களின் வீடு­க­ளிலும் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வாழ்க்­கையைத் தொடர்ந்­தனர்.

2001 வரு­டமும் இப்­ப­கு­தியில் மண்­ச­ரிவு ஏற்­படும் அபாயம் உள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. பல இலட்சம் ரூபா செல­வ­ழித்து வீடு­களைக் கட்­டி­யி­ருந்த மக்­க­ளுக்கு இன்று எல்லாம் கைக­ழுவ வேண்­டிய நிலை­யேற்­பட்­டுள்­ளது.

புதிய வீடுகள் அமைக்கும் வசதி இம் மக்­க­ளுக்கு இல்­லை­யெனத் தெரிவிக்கும் இவர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தின் மூலம் வீடுகள் அமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related

News Alert 957120607802229183

Post a Comment

emo-but-icon

Advertiesment

CRICKET LIVE UPDATE

Hot in week

Recent

Comments

SMS NEWS ALERT

item