விமான நிலைய ஊழியர்களின் போராட்டத்தால் பல விமானங்கள் ரத்து

பெல்ஜிம் நாட்டின் பிரசெல்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், விமான சேவை பாதிக்கப்பட்...

பெல்ஜிம் நாட்டின் பிரசெல்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் வயது வரம்பில் மாற்றம், சம்பள உயர்வு, பணிச் சுமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகின்றது.

விமான நிலைய கட்டுபாட்டாளர்களின் இந்த போராட்டத்தால் கடந்த இரண்டு தினங்களாக பிரசெல்ஸ் விமான நிலையத்தின் பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, 7 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. அதனையடுத்து நேற்று புதன் கிழமை 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related

News Alert 734420363978399069

Post a Comment

emo-but-icon

Advertiesment

CRICKET LIVE UPDATE

Hot in week

Recent

Comments

SMS NEWS ALERT

item